தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குழாய் பணிகளால் குதிக்கும் வாகனங்கள்

 குழாய் பணிகளால் குதிக்கும் வாகனங்கள்

 குழாய் பணிகளால் குதிக்கும் வாகனங்கள்


ADDED : ஏப் 14, 2026 05:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 05:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: ''தேனுார் சேம்பரில் ரோட்டை சீரமைக்க வேண்டும்'' என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

இங்கு மதுரை மெயின் ரோட்டில் தேனுார் முதல் சேம்பர் வரை ஓராண்டுக்கு முன் ராட்சத குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன. பணி முடிந்து முறையாக திட்டமிடப்பட்டு சீரமைக்காததால் பல இடங்களில் 2 அடி வரை பள்ளமாகியுள்ளது. இதனால் ரோடு அலை அலையாக மாறி, அதில் செல்லும் வாகனங்கள் குதித்தோடுகின்றன.

பள்ளம் இருப்பதே தெரியாததால் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இரவில் போதிய விளக்குகள் இல்லாததால் விபத்து ஏற்பட்டு விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us