ADDED : ஏப் 17, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 305 டூவீலர்கள், 11 மூன்று சக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனங்கள் ஆயுதப்படையில் ஏப்.25ல் ஏலம் விடப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் ஏப்.23 காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முன்பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனங்களை ஏப்.22,23,24ல் நேரில் பார்வையிடலாம். மேலும் விபரங்களுக்கு எஸ்.ஐ.,க்கள் மருதலட்சுமி 94981 79176, தெய்வேந்திரன் 94981 79294ல் தொடர்பு கொள்ளலாம்.