sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டிச.29 முதல் வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி விழா

/

டிச.29 முதல் வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி விழா

டிச.29 முதல் வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி விழா

டிச.29 முதல் வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி விழா


ADDED : டிச 22, 2024 07:26 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதரின் 244ஆம் ஜெயந்தி இசை விழா தெற்குகிருஷ்ணன் கோயில் தெரு ஸ்ரீரங்க மகாலில் டிச. 29 முதல் 31 வரை நடக்கிறது.

டிச.29 காலை 6:30 மணிக்கு லட்சுமி நாராயண சுதர்சன ேஹாமத்துடன் விழா துவங்குகிறது. இசை விழாவில் சிறப்பு விருந்தினராக வேங்கடரமண பாகவதர் டிரஸ்டி சுரேஷ் பங்கேற்கிறார். வித்வான்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்குதல், பாராட்டு விழா நடக்கிறது. மாலை 4:00 மணி முதல் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

டிச.30ல் சத்குரு சங்கீத வித்யாலயா இசைக்கல்லுாரி மாணவர்களின் நிகழ்ச்சியுடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சி துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள், மதியம் 12:00 மணிக்கு பாகவதர் கைங்கர்யம் - மகான்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. மாலை 4:00 மணி முதல் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

டிச.31 காலை 3ம் நாள் நிகழ்ச்சி அரசு இசைக்கல்லுாரி மாணவர்களுடன் துவங்குகிறது. காலை 10:15 மணிக்கு சமாஜ மூத்த உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. காலை 11:00 மணிக்கு குரு சரணம் சரணம் என்ற தலைப்பில் திருவனந்தபுரம் சாந்திகிரி சித்த மருத்துவக்கல்லுாரி முதல்வர் சவுந்திரராஜனின் சொற்பொழிவு நடக்கிறது. மதியம் 12:00 மணி முதல் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு 9:00 மணிக்கு ஆஞ்சநேய உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவத சேவா சமாஜம் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us