ADDED : ஏப் 23, 2025 04:33 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை ஒத்தக்கடை பகுதி திவ்ய மீனாட்சி என்பவரது பெண் நாய் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். எக்ஸரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்தனர்.
அதில் கர்ப்பப்பையில் சீழ் படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகன், துணை இயக்குனர் நந்தகோபால் அறிவுரைப்படி டாக்டர்கள் சரவணன், முத்துராம், முத்துகுமார், கோபி கொண்ட குழு நாயின் 6.8 கிலோ கர்ப்பப்பையை அகற்றினர். தற்போது நாய் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
