/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கந்தசஷ்டி விழா ஏற்பாடு அரசுக்கு வி.எச்.பி., கண்டனம்
/
கந்தசஷ்டி விழா ஏற்பாடு அரசுக்கு வி.எச்.பி., கண்டனம்
கந்தசஷ்டி விழா ஏற்பாடு அரசுக்கு வி.எச்.பி., கண்டனம்
கந்தசஷ்டி விழா ஏற்பாடு அரசுக்கு வி.எச்.பி., கண்டனம்
ADDED : அக் 26, 2025 04:22 AM
மதுரை: '' கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும் முருகனின் அறுபடை வீடுகள் கோயில்களில் தமிழக அரசு அடிப்படை வசதிகளை செய்யாதது கண்டிக்கத்தக்கது'' என விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டினார்
மதுரையில் அவர் கூறியதாவது: அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் அதிகளவில் கந்த சஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். திருச்செந்துார், திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கோயில் வளாகங்களில் தங்கி விரதமிருக்கின்றனர். தற்போதுள்ள ஹிந்து விரோத தமிழக அரசு, முருகன் கோயிலில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கூட செய்து கொடுக்க முடியாத நிலையில் உள்ளது வெட்கக்கேடு. உடனடியாக கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்
சூரசம்ஹாரத் திருவிழா நடக்கும் திருச்செந்துார் முருகன் கோயிலில் வரும் அனைத்து பக்தர்களும் சுவாமியை தரிசிக்க ஏதுவாக கூடுதல் வரிசைகளை ஏற்படுத்தவேண்டும். துாத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் செல்லும் சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் சுற்றுலா பஸ்களை முக்கிய நகரங்களில் இருந்து இயக்க வேண்டும் என தெரிவித்தார்.

