ADDED : அக் 20, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்.27ல் விக்கிரவாண்டியில் நடக்க உள்ளது. இதற்கு அழைப்பு விடுத்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
அரசியல் திருப்புமுனைகளுக்கு பெயர் பெற்ற மதுரையில் அவரது ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை போஸ்டராக ஒட்டியுள்ளனர். அதில், 'மதுரை வடக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர்' என தெரிவித்துள்ளனர். இதை பார்த்து உற்சாகமடைந்துள்ள சக ரசிகர்கள், 'வடக்கு தொகுதியில் தளபதியை(தி.மு.க., எம்.எல்.ஏ.,) வெல்ல போகும் இளைய தளபதி' என சிலாகித்து வருகின்றனர்.