/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க., கூட்டணியில் கரூரில் போட்டியிட விஜய் திட்டம் செல்'வாக்கை' தக்க வைக்க த.வெ.க., முயற்சி
/
அ.தி.மு.க., கூட்டணியில் கரூரில் போட்டியிட விஜய் திட்டம் செல்'வாக்கை' தக்க வைக்க த.வெ.க., முயற்சி
அ.தி.மு.க., கூட்டணியில் கரூரில் போட்டியிட விஜய் திட்டம் செல்'வாக்கை' தக்க வைக்க த.வெ.க., முயற்சி
அ.தி.மு.க., கூட்டணியில் கரூரில் போட்டியிட விஜய் திட்டம் செல்'வாக்கை' தக்க வைக்க த.வெ.க., முயற்சி
ADDED : அக் 23, 2025 04:06 AM
மதுரை: த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., முயற்சிக்கும் நிலையில், கரூர் விவகாரத்தில் தன் மீது அந்நகர மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் சட்டசபை தேர்தலில், 'வி' நியூமராலஜிபடி 41 பேர் இறந்த இடமான வேலுசாமிபுரம் உள்ளடக்கிய கரூர் தொகுதியில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளார்.
அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் த.வெ.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்தார். ஆனால் இதுவரை அக்கட்சியுடன் எந்த கட்சியும் கூட்டணி சேர முன்வரவில்லை.
இச்சூழலில் கடந்த ஆகஸ்டில் மதுரையில் 2வது மாநில மாநாடு நடத்திய விஜய், 'எல்லா தொகுதியிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து களப்பணியாற்ற வேண்டும்' என தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்து செப்.,13ல் திருச்சியில் பிரசாரத்தை துவக்கினார். செப்.,27 ல் கரூரில் நடந்த கூட்டத்தில் விஜய் பேசியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.
இதுதொடர்பாக ஆளும் தி.மு.க., அரசும், த.வெ.க.,வும் மாறி மாறி குற்றம்சாட்டின. த.வெ.க.,வுக்கு ஆதரவாக அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கருத்து தெரிவித்தன. இச்சூழலில் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகிறது.
அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கரூர் விவகாரத்தில் விஜய் பெயரை 'டேமேஜ்' செய்ய தி.மு.க., முயற்சித்தது. ஆனால் இதில் சதி இருப்பதாக கருதிய விஜய், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி சி.பி.ஐ., விசாரணையை கேட்டார். இது தி.மு.க., அரசுக்கு பின்னடைவுதான்.
கரூர் விவகாரத்தில் திட்டமிட்ட சதியால்தான் 41 பேர் பலியாயினர் என்று த.வெ.க., நம்புகிறது. 'பழம் தின்னு கொட்டை போட்ட' தி.மு.க.,வை எதிர்த்து தனி கட்சியாக அரசியல் செய்வது சிரமம் என கருதும் விஜயின் மனநிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
'வி' நியூமராலஜி அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தன் கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என விஜய் கருதுகிறார். இதுகுறித்து சகநிர்வாகிகளுடன் ஆலோசித்தும் உள்ளார்.
இதை அறிந்துதான் நாங்கள் அவருக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். ஏற்கனவே அவர் 'வி' எனும் ஆரம்பிக்கும் தொகுதியில் போட்டியிட நியூமரலாஜி அடிப்படையில் முடிவு செய்திருந்தார். தற்போது கூட்டணி அமையும்பட்சத்தில் கரூர் தொகுதியில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளார்.
அந்த தொகுதிக்குள்தான் 41 பேர் இறந்த இடமான வேலுச்சாமிபுரம் உள்ளது. இதுவும் 'வி' என ஆங்கில எழுத்தில் ஆரம்பிப்பதால் நியூமராலஜிபடி போட்டியிட்டால் தனக்கு 'சென்டிமென்ட்' ஆக வெற்றியை தரும். தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள செந்தில்பாலாஜியை எதிர்த்து போட்டியிடுவதன் மூலம் தன் மீது திட்டமிட்டு சுமத்தப்பட்ட பழிச்சொல், அவப்பெயரை போக்க முடியும் விஜய் கருதுகிறார்.
சி.பி.ஐ., விசாரணையை கேட்டு பெற்றபின் தன் மீது கரூர் மக்கள் முழு நம்பிக்கை வைத்து எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என விஜய் நம்புகிறார். இதன் அடிப்படையில் கரூர் தொகுதியில் விஜய் போட்டியிடும்பட்சத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற உழைக்கும். இவ்வாறு கூறினார்.