sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 அறையில் இருந்தபடி அரசியல் செய்யும் விஜய் செல்லுார் ராஜூ கிண்டல்

/

 அறையில் இருந்தபடி அரசியல் செய்யும் விஜய் செல்லுார் ராஜூ கிண்டல்

 அறையில் இருந்தபடி அரசியல் செய்யும் விஜய் செல்லுார் ராஜூ கிண்டல்

 அறையில் இருந்தபடி அரசியல் செய்யும் விஜய் செல்லுார் ராஜூ கிண்டல்


ADDED : ஜன 31, 2026 07:03 AM

Google News

ADDED : ஜன 31, 2026 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''விஜய், அறையில் இருந்தபடி அரசியல் செய்கிறார். களத்திற்கு வருவதில்லை'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கிண்டலடித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: விஜய் எங்களை திட்டுகிறார். அதனால் நாங்கள் அவரை திட்டுகிறோம். அவர் அறையில் இருந்து அரசியல் செய்கிறார். களத்திற்கு வருவதில்லை. 41 பேர் இறந்த விவகாரத்தில் சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறியது புதுசாக இருக்கிறது.

அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு குறித்து பன்னீர் செல்வத்திற்கு தெரியும். தன்னை கட்சியில் இணைக்க கோரி நாடகம் நடத்துகிறார். பன்னீர்செல்வத்தால் அவருக்கு பின்னால் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.தி.மு.க.,வுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு சுனாமி விரைவில் வெளிப்படும். தி.மு.க., ஆட்சியில் விலைவாசியால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பழனிசாமி சொல்வது போல் தி.மு.க.,வின் விடியா ஆட்சிக்கு வீட்டு பில்லே சாட்சி. அமைச்சர்கள் தங்கள் ஆட்சியில் விலைவாசி குறைந்துள்ளது எனச் சொல்ல முடியுமா.

அதி.மு.க., சார்பில் 10 கோரிக்கைகள் மதுரை மக்களுக்காக மாநகராட்சியிடம் முன்வைக்கப்பட்டன. அவற்றை கலெக்டர் தலைமையிலான குழு ஆய்வு செய்ததே தவிர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.என் தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.ஆனால் அமைச்சர் மூர்த்தி தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தடையின்றி குடிநீர் கிடைக்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us