/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் விஜயவாடா மாநகராட்சி குழு
/
மதுரையில் விஜயவாடா மாநகராட்சி குழு
ADDED : ஏப் 27, 2025 05:35 AM
மதுரை : ஆந்திரா மாநிலம் விஜயவாடா மாநகராட்சி துணை மேயர் அவித்துஸ்ரீ சாய்லாஜாரெட்டி, குழு தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் மதுரை வந்தனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ராவுடன் கலந்துரையாடினர்.
மதுரையில் மேற்கொள்ளப்படும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், சாலைகள் மேம்பாடு, திடக் கழிவு மேலாண்மை, குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், விஜயவாடா மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் சுகாதாரம், குடிநீர், நவீன கழிப்பறை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டப்படும் பேரங்காடி வணிக வளாகத்தை பார்வையிட்டனர். மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர்.

