/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிராம சுகாதார செவிலியர் ஆர்ப்பாட்டம்
/
கிராம சுகாதார செவிலியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 08, 2025 01:46 AM
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம செவிலியர்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல் தெரிவித்த சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியனின் கருத்துகளை திரும்ப பெற வேண்டும்.கிராம சுகாதார செவிலியர்களின் காலிப்பணியிடங்களை எவ்வித நிபந்தனையும் இன்றி நிரப்ப வேண்டும். தடுப்பூசிகளை தனியார் மயமாக்கும் அரசின் கொள்கையை திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தினர்.
மாவட்ட தலைவர் சமுத்திரம் தலைமை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் சங்க மாநில துணைத் தலைவர் பாண்டியம்மாள், செவிலியர் சங்க மாவட்ட தலைவர் லாவண்யா, பகுதி சுகாதார செவிலியர் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு, கிராம செவிலியர் சங்க மாநில செயலாளர்கள் பிரேமாஆனந்தி, சின்னாயி பேசினர். அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் மணிகண்டன், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தனர்.
பொருளாளர் பிரபாவதி நன்றி கூறினார்.