/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிராம ஊராட்சி பணியாளர்கள் பிப்.2ல் பெருந்திரள் முறையீடு
/
கிராம ஊராட்சி பணியாளர்கள் பிப்.2ல் பெருந்திரள் முறையீடு
கிராம ஊராட்சி பணியாளர்கள் பிப்.2ல் பெருந்திரள் முறையீடு
கிராம ஊராட்சி பணியாளர்கள் பிப்.2ல் பெருந்திரள் முறையீடு
ADDED : ஜன 15, 2024 11:47 PM
பேரையூர் : தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள்சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பிப்.,2ல் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடக்கிறது.
இதில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி செயலாளர்கள், சுகாதாரம்,துாய்மை பணியாளர்கள்பங்கேற்கின்றனர். இதற்கான ஆலோசனை கூட்டம் டி.கல்லுப்பட்டியில் நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் அர்ச்சுனன், டி.கல்லுப்பட்டி ஒன்றிய தலைவர் கார்த்திக்ராஜா, பொருளாளர் சங்கர் கூறியதாவது:
ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு முழு முறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்வு நிலை, சிறப்பு நிலை, தேக்க நிலை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது என்றனர்.