தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நிழற்குடைக்காக ஏங்கும் கிராமத்தினர்

நிழற்குடைக்காக ஏங்கும் கிராமத்தினர்

நிழற்குடைக்காக ஏங்கும் கிராமத்தினர்


UPDATED : நவ 11, 2026 11:40 PM

ADDED : நவ 11, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 11:40 PM ADDED : நவ 11, 2026 07:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: சோழவந்தான் - வாடிப்பட்டி ரோட்டில் மேட்டுநீரேத்தான் பிரிவில் நிழற்குடை அமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

ஊருக்குள் மினிபஸ்கள் மட்டுமே வந்து செல்லும். பெரும்பாலும் மக்கள் 1 கி.மீ., நடந்து மேட்டுநீரேத்தான் பிரிவில் சென்று பஸ் ஏறும் நிலையுள்ளது. இங்கு காத்திருப்பதற்கு நிழற்குடையில்லாததால் சிரமமடைகின்றனர்.

அப்பகுதி பிரபு: பஸ் ஸ்டாப் என்பதற்கான அடையாளம் கூட இல்லாத இடத்தில் திறந்தவெளியில் பஸ் ஏறுகிறோம். ஊரிலிருந்து நடந்து வரும் பெண்கள், குழந்தைகள்,முதியோர் இளைப்பாறக்கூட இடமில்லை. திடீரென்று மழை வரும் போது ஒதுங்க கூட முடியாது. வெயில் காலங்களில் நீண்ட நேரம் நிற்கும் போது பலர் மயக்கம் அடைகின்றனர். இரவில் வழிப்பறி திருடர்கள், விஷஜந்துக்கள், தெருநாய்களால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பலமுறை அதிகாரிகள் எம்.எல்.ஏ., எம்.பி.,களிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us