/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாதையை துண்டித்ததால் கிராம மக்கள் மறியல்
/
பாதையை துண்டித்ததால் கிராம மக்கள் மறியல்
ADDED : ஜூலை 24, 2011 02:05 AM
மேலூர்:பல ஆண்டுகளாக பொது மக்கள் பயன்படுத்தி வந்த தார் ரோட்டை, தனக்கு
சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி, தனியார் ஒருவர் இயந்திரம் மூலம் ரோட்டை
தோண்டியதை எதிர்த்து கிராம மக்கள் மறியிலில் ஈடுபட்டனர்.மேலூர் அருகில்
உள்ள வெள்ளலூர் ஊராட்சிக்குட்பட்டது மேலவலசை கிராமம்.
இந்த ஊருக்கு
செல்லும் தார் ரோட்டை நேற்று குருசாமி மற்றும் வடிவேல் ஆகியோர் இயந்திரம்
மூலம் தோண்டினர். அப்போது மேல்நிலை தொட்டிக்கு அவ்வழியாக சென்ற குடிநீர்
குழாய் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதற்கு எதிரப்பு தெரிவித்து கிராம
மக்கள் 200 பேர், ஊராட்சி தலைவர் தவமணி ராஜா தலைமையில் நேற்று மாலை
கோட்டநத்தம்பட்டி விலக்கில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேலூர்- சிவகங்கை
ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு
வந்த டி.எஸ்.பி., மணிரத்தினம், இன்ஸ்பெக்டர் மாடசாமி பிரச்னையை பேசி
தீர்க்கலாம் என கிராம மக்களிடம் கூறி மறியலை கைவிட செய்தனர்.