ADDED : ஏப் 09, 2026 06:25 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் ஏப். 7 ம்தேதி இரவு 8:00 மணிக்கு அனைத்திந்திய பு.த.ம.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் பிரசார கூட்டம் நடந்தது.
தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது, பிரசார கூட்டத்திற்கு அனுமதி பெறாமல், அதிக மக்களைச் சேர்த்து, பட்டாசு வெடித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக, அக்கட்சி வேட்பாளர் அய்யப்பன் உள்பட கட்சி நிர்வாகிகள் 9 பேர் மீது தேர்தல் பறக்கும் படையினர் ஏப். 8 ல் போலீசில் புகார் செய்தனர். உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
