ADDED : ஏப் 11, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய கட்டடப்பணிகள் நடக்கிறது. வி.ஐ.பி., தங்கும் அறைகள் ரூ. 92.57 லட்சத்தில் ஏசி, ஆர்.ஓ., வாட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
தங்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோட்டை சுவர் மண்டப கட்டடம் பாழடைந்துள்ளதால் முழுவதுமாக மாற்றம் செய்யப்பட்டு பராமரிப்பு பணி நடக்கிறது. கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுந்தரராஜன்பட்டி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணியும் நடக்கிறது.

