ADDED : ஜன 14, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : வாடிப்பட்டி, அலங்காநல்லுார் மற்றும் இடையபட்டியில் சுவாமி விவேகானந்தரின் 162 வது பிறந்தநாள் விழா ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் கொண்டாடப்பட்டது.
ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், வாடிப்பட்டி தலைவர் சிவசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் தலைமை வகித்தனர்.
ஒன்றிய தலைவர் கணேசன், கிளை செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தனர். விவேகானந்தரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

