ADDED : ஜூன் 10, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோ.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏ.ஆர்., வி.ஆர்., தொழில்நுட்ப பயிற்சி ஜூன் 21, 22ல் நடத்தப்படும். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி கட்டணம் ரூ.3,540.
தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஜூன் 23 முதல் ஜூலை 4 வரை நடைபெறும். இதில் தங்கம் பற்றிய முழு விவரம், கணக்கிடும் முறை, தரம் பார்த்தல் கற்றுத்தரப்படும். வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக வேலைவாய்ப்பு பெறவும், சுய தொழில் தொடங்கவும் உதவும். பயிற்சி முடிவில் மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.7,375. கூடுதல் தகவல்களுக்கு 86956 46417, 86670 65048ல் தொடர்பு கொள்ளலாம்.