ADDED : ஜூலை 20, 2025 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருநகர் வாலிபால் அகாடமியில் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி நடந்தது. சீத்தாலட்சுமி மேல்நிலைப் பள்ளி ஏற்பாடுகளை செய்தது. அகாடமி நிறுவனர் அன்பரசன் தொடங்கி வைத்தார்.
ஆடவர் பிரிவு 14 வயது இறுதிப்போட்டியில் சி.எஸ்.ஆர்., பள்ளி 7 - 4 கோல் கணக்கில் தேவசகாயம் பள்ளியையும் 17 வயது பிரிவில் 6 - 5 கோல் கணக்கிலும் 19 வயது பிரிவில் 9----1 கோல் கணக்கிலும் சி.எஸ்.ஆர். பள்ளி வென்றது.
மகளிர் பிரிவு 14 வயது இறுதிப் போட்டியில் அக்சரா பள்ளி 5-3 கோல் கணக்கில் தேவசகாயம் பள்ளியை வீழ்த்தியது. 17 வயது பிரிவில் தேவசகாயம் பள்ளி 5-1 கோல் கணக்கில் சி.எஸ்.ஆர். பள்ளியை வீழ்த்தியது. உடற்கல்வி ஆசிரியர்கள் நாகரத்தினம், குமார் ஏற்பாடுகளை செய்தனர்.