/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாலிபால்: அமெரிக்கன் கல்லுாரிக்கு இரண்டாமிடம்
/
வாலிபால்: அமெரிக்கன் கல்லுாரிக்கு இரண்டாமிடம்
ADDED : ஜன 30, 2024 07:27 AM

மதுரை : தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மாநில அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தன.
இதில் தமிழகத்தின் தலைசிறந்த 6 அணிகள் பங்கு பெற்றன.
இப்போட்டியின் முடிவில், 13 புள்ளிகள் பெற்று ஈரோடு பி.கே.ஆர்., அணி முதல்பரிசையும், 10 புள்ளிகளுடன் மதுரை அமெரிக்கன் கல்லுாரி அணி 2வது பரிசையும், 9 புள்ளிகளுடன் சென்னை பனிமலர் கல்லுாரி 3வது பரிசையும், 6 புள்ளிகளுடன் சேலம் சக்தி கைலாஷ் அணியினர் 4வது பரிசையும், 5 புள்ளிகள் பெற்ற சென்னை ஜே.பி.ஆர்., அணியினர் 5வது பரிசையும், 3 புள்ளிகளுடன் விழுப்புரம் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணியினர் 6வது பரிசையும் பெற்றனர்.
சிறந்த பயிற்சியாளர்களுக்கான விருதை தீபன்ராஜ், சிறந்த வீராங்கனைக்கான பரிசை பவித்ரா, சிறந்த தடுப்பாட்டக்காரருக்கான விருதை மீனாட்சியும் பெற்றனர்.