ADDED : பிப் 12, 2025 04:23 AM
பேரையூர்: ஜன. 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான சுருக்கமுறை திருத்தம் 2024, அக். 29 ல் துவங்கி நவ.28 வரை நடந்தது.
வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி, தொகுதி மாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. ஜன. 6 ல் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியானது. இளம் வாக்காளர்கள், ஒரே தொகுதிக்குள் இடமாற்றம், வேறு தொகுதிக்கு மாற்றம், வாக்காளர் அட்டையில் புகைப்படம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக விண்ணப்பித்து, உரிய திருத்தங்களுடன் புதிய வாக்காளர் அட்டை அச்சிடப்பட்டு தபால் அலுவலகங்கள் மூலம் ஸ்மார்ட் கார்டு வடிவில் வண்ண அட்டை வாக்காளர்களின் வீடு தேடி செல்கிறது. பேரையூர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தபால்காரர்கள் வாக்காளர் அட்டை பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர்.

