UPDATED : நவ 24, 2026 08:38 PM
ADDED : நவ 24, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027 தொடர்பான சிறப்பு முகாமில் 7,296 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நவ.21, 22ல் நடந்த சிறப்பு முகாமில், 10 சட்டசபை தொகுதிகளிலும் படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்படி புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க 3,655 பேரும், குடியிருப்பு இடமாற்றம், வாக்காளர் பட்டியல் விவரத் திருத்தம் ஆகியவற்றிற்காக 3,137 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 502 பேர் ஏற்கனவே உள்ள பெயரை நீக்க கோரியுள்ளனர்.
