ADDED : நவ 23, 2024 05:16 AM
அ நிறம் | அளவு
மதுரை; மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் (நவ.23, 24) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் காலை 9:00 மணி முதல் நடக்கும் இம்முகாமில் தேவையான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து அளிக்கலாம். மாவட்டத்தின் 10 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள 1165 மையங்களில் இம்முகாம் நடைபெறும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
