/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வல்கனைசிங் தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு விழா
/
வல்கனைசிங் தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு விழா
வல்கனைசிங் தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு விழா
வல்கனைசிங் தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு விழா
ADDED : ஜன 05, 2026 05:41 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு வல்கனைசிங் பழுது பார்க்கும் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு விழா தலைவர் முத்துராஜ் தலைமையில் நடந்தது.
புதுச்சேரி மானடெக் நிறுவன துணை பொது மேலாளர் சரத்பாபு, டி.வி.எஸ்., யூரோகிரிப் டயர்ஸ் துணைத் தலைவர் ராகேஷ் ராமச்சந்திரா, மண்டல தலைவர் ஆனந்த விஜயன் ஆகியோர் தொழில் சார்ந்த ஆலோசனை வழங்கினர். பஞ்சர் கடை சங்கத்தை நலவாரியத்துடன் இணைக்க வேண்டும். பணியின் போது இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுச் செயலாளர் இளையராஜா, பொருளாளர் காண்டீபன், மாவட்ட தலைவர் பாஷா, செயலாளர் ராஜூ, பொருளாளர் சொக்கலிங்கம் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.