sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 காத்திருந்து... காத்திருந்து... விடைத்தாள் திருத்தியதற்கு சம்பளம் எப்போது வரும் பல்கலையிடம் எதிர்பார்க்கும் கல்லுாரி ஆசிரியர்கள்

/

 காத்திருந்து... காத்திருந்து... விடைத்தாள் திருத்தியதற்கு சம்பளம் எப்போது வரும் பல்கலையிடம் எதிர்பார்க்கும் கல்லுாரி ஆசிரியர்கள்

 காத்திருந்து... காத்திருந்து... விடைத்தாள் திருத்தியதற்கு சம்பளம் எப்போது வரும் பல்கலையிடம் எதிர்பார்க்கும் கல்லுாரி ஆசிரியர்கள்

 காத்திருந்து... காத்திருந்து... விடைத்தாள் திருத்தியதற்கு சம்பளம் எப்போது வரும் பல்கலையிடம் எதிர்பார்க்கும் கல்லுாரி ஆசிரியர்கள்

1


ADDED : பிப் 18, 2026 05:11 AM

Google News

ADDED : பிப் 18, 2026 05:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் மாணவர்களின் விடைத்தாள் திருத்தியதற்கான சம்பளம் வழங்க வேண்டும்' என கல்லுாரி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பல்கலையில் 100க்கும் மேற்பட்ட இணைவிப்பு கல்லுாரிகள் உள்ளன. தன்னாட்சி கல்லுாரிகள் தவிர 80க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் 2025 நவம்பருக்கான 'செமஸ்டர்', 'நான்செமஸ்டர்' தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணிகளை பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி, இணைப் பேராசிரியர்கள் மேற்கொண்டனர்.

இதற்காக யு.ஜி., விடைத்தாளுக்கு தலா ரூ.11, பி.ஜி., விடைத்தாளுக்கு தலா ரூ.15 வீதம் மதிப்பீட்டு சம்பளம் பல்கலையால் வழங்கப்படும். இதுதவிர போக்குவரத்துப்படியாக பேராசிரியர்கள் வந்துசெல்லும் துாரத்தின் அடிப்படையில், தலா ரூ.150, ரூ.250 என இருவகையாக வழங்கப்படும். இவ்வகையில் ஒரு ஆசிரியருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை மதிப்பீட்டு சம்பளம் கிடைக்கும். இதற்காக மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு மாதமாகியும் மதிப்பீடு பணி சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தேர்வாணையர் (பொறுப்பு) முத்தையா கூறியதாவது: பல ஆண்டுகளாகவே இத்தொகை வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்படும். அது தவிர்க்கப்பட்டு தற்போது 20 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிப்பீட்டு பணி ஜனவரி வரை நடந்தது.

சம்பளம் வழங்குவதற்கான 'பைல்'கள் நடைமுறை முடிந்தது. 'போர்டு' வாரியாக மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்தான் பேராசிரியர், அலுவலர்களுக்கான மாதச் சம்பளம் வழங்கப்பட்டது. பல்கலை நிதிநிலை காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டிருக்கலாம். விரைவில் அதுவும் வழங்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us