ADDED : ஜன 30, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி வார்டு 15ல் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தரக்கோரி, அப்பகுதி மக்கள் குடியரசு தினத்தன்று நகராட்சியில் கொடியேற்ற விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சு நடத்தி ஆர்.டி.ஓ., முன்பு இது குறித்து பேச அழைத்தனர். பேச்சு வார்த்தைக்காக நேற்று முன்தினம் வந்தவர்களிடம் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி., செந்தில்குமார், அதிகாரிகள் (ஜன. 30) இன்று பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பினர்.

