ADDED : செப் 18, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரசரடியில் ரயில்வே மைதானத்தில் அதிகாலையில் பலர் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
ஜாக்கிங், நடைப்பயிற்சி மேற்கொள்வோரை தெருநாய்கள் விரட்ட முற்படுகின்றன. விரட்டினால் கடிக்க பாய்கின்றன. இதனால் பலர் காலை பயிற்சிக்கு அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மைதான ஊழியர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நாய்கள் தொல்லை குறைந்தபாடில்லை. அவற்றை மாநகராட்சி பிடித்துச் செல்ல வேண்டும் என நடைப்பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.
