நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாய நலச் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நிர்வாகிகள் ரவி, ஜெயபால், குறிஞ்சி குமரன் உள்பட பலர் தலைமை வகித்தனர். இதில் பெரியார் பாசன பகுதியை பாதிக்கும் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை நிரந்தரமாக ரத்து செய்வது வரை போராடுவது மற்றும் ஜன. 7 நரசிங்கம்பட்டி முன்னமலை ஆண்டி கோயிலில் இருந்து தாலுகாவை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து நடை பயணமாக சென்று மதுரை தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மேலுாரை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்

