ADDED : ஜன 08, 2026 05:59 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருமால் நத்தத்தில் பாசன கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
சோழவந்தான் முல்லையாற்று கால்வாயிலிருந்து பிரியும் கிளைக்கால்வாய் ஆலங்கொட்டாரம், ரிஷபம், திருமால் நத்தம் வழியே நெடுங்குளம் திருவாலவாயநல்லுார் கண்மாய்களுக்குச் செல்கிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் விவசாயம் பாதிக்கும் நிலை உருவாகிறது. கழிவுகள் கண்மாயில் தேங்கி நீரின் நிறம் கருப்பாகி சாக்கடையாக மாற வாய்ப்பு உள்ளது. செடி,கொடிகள் கால்வாயை ஆக்கிரமித்துள்ளன.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்து கின்றனர்.
