ADDED : ஏப் 10, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பி.ஓ.பி., நகரில் குடிநீர் வீணாகி குளம் போல் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் அதிகமாக வருவதால் வீணாகி குளம் போல் தேங்கியுள்ளது. இப்பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீரும், குடிநீரும் கலந்து சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. இந்த தண்ணீர் மூலம் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பகலிலும் கடித்து வருகிறது.
தேங்கிய தண்ணீரில் தெரு நாய்கள் குளியல் போடுவது வழக்கமாகி விட்டது. பல நாட்கள் ஆகியும் பேரூராட்சியினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.