ADDED : ஏப் 28, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட அடிபம்பு குழாய்கள் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒன்றியத்தின் அனைத்து கிராமங்களிலும் அடிபம்பு குழாய்கள் சேதமாகி, சிமென்ட் பூச்சு உதிர்ந்து மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத அவலம் உள்ளது.
தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் அடி பம்புகளில் தண்ணீர் வருகிறது. அதேசமயம் அடி பம்பை சீரமைக்க வலியுறுத்தி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

