/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விக்கிரமங்கலம் தெருக்களில் கழிவு நீர்
/
விக்கிரமங்கலம் தெருக்களில் கழிவு நீர்
ADDED : ஜன 02, 2025 05:24 AM

விக்கிரமங்கலம்: செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் தெருக்களில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரம் பாதித்துள்ளது.
இங்குள்ள கருப்பு கோயில் பின்புறம் உள்ள தெருக்களில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்குகிறது. இப்பகுதியில் 2022ல் ரூ4 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டது.
உரிய திட்டமிடல் இல்லாததால் மேலக்கால் மெயின் ரோடு பகுதியில் வாய்க்கால் இணைப்பு பகுதியில் உருளை வடிவ சிமென்ட் குழாய் பதித்துஉள்ளனர். சாலையின் குறுக்கே உள்ள பாலம் பழமையாக உள்ளதாலும், எதிர் திசையில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் மேடாக உள்ளதாலும் கழிவுநீர் செல்ல முடியவில்லை.
அப்பகுதியைச் சேர்ந்த ராமுத்தாயி கூறுகையில், ''கழிவு நீர் கால்வாய் கட்டிய நாள் முதல் அவதிப்படுகிறோம். மழை நேரங்களில் ஒரு அடிக்கு மேல் கழிவுநீருடன் தண்ணீரும் தேங்கும். அதில் உள்ள குடிநீர் குழாய்களில் தான் தண்ணீர் பிடித்து பயன்படுத்துகிறோம். இந்தப் பிரச்சினையால் வாய்க்காலில் ஆங்காங்கு வீடுகள் முன் அடைப்பு வைத்துள்ளனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை  என்றார்.

