தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பறவைகளைப் பார்த்தால் வயதாகும் தன்மை குறையும்

 பறவைகளைப் பார்த்தால் வயதாகும் தன்மை குறையும்

 பறவைகளைப் பார்த்தால் வயதாகும் தன்மை குறையும்


ADDED : மார் 13, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ''பறவைகளை பார்ப்பதன் மூலம் மூளை ஆரோக்கியம் அதிகரிக்கும்; வயதாகும் தன்மை குறையும் என ஆய்வுகள் கூறுவதாக'' மதுரை அமெரிக்கன் கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜேஷ் தெரிவித்தார்.

ஆய்வுகள் குறித்து அவர் கூறியதாவது:

நியூரோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், 'பறவைகளைப் பார்ப்போரின் மூளை அமைப்பு, செயல்பாட்டை மாற்றக்கூடும். இது 'நியூரோபிளாஸ்டிசிட்டி' எனப்படுகிறது. அறிவாற்றல் திறனை அதிகரிக்க உதவுகிறது' என டொராண்டோவில் உள்ள யார்க் பல்கலை முன்னணி ஆராய்ச்சியாளர் எரிக் விங் விளக்கியுள்ளார்.

ஜர்னல் ஆப் நியூரோசயின்ஸில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் பறவைகளை அடையாளம் காண்பதில் திறமையானவர்கள் மூளையில் வயது தொடர்பான மெதுவான மாற்றங்களைப் பெறுகின்றனர் என்று கூறுகிறது. ஏனென்றால் பறவைகளை வேறுபடுத்தி அறிவது எளிதல்ல. முதல் பார்வையில் காகமும் குயிலும் ஒரே மாதிரித் தோன்றும்.

அதன் பின் கூர்ந்து கவனிக்கும் போதே வித்தியாசங்களை அறியமுடியும். இந்த வகையான கவனம் செலுத்தும் கற்றல், மூளையை மறுவடிவமைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us