ADDED : ஜன 15, 2024 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர், : பேரையூர்- டி.கல்லுப்பட்டி சாலை கருப்பசாமி கோவில் அருகே வைகை கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் வீணாகி வருகிறது. அப்பகுதி தெருக்களில் தேங்கி நிற்கிறது. கடந்த 2 நாட்களாக வீணாகி வருகிறது. அதை சீரமைக்க முயற்சி எடுக்காததால் அந்த உடைப்பு பெரிதாகி அதிக குடிநீர் வெளியேறி வருகிறது.
வெளியேறும் தண்ணீரில் தெரு நாய்கள் குளிக்கின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
உடைந்த குழாய்களை அகற்றி புதிய குழாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.