/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : டிச 23, 2025 07:12 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றியம் கச்சைகட்டி ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்கள் மூலம் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
குட்லாடம்பட்டி அருவி கண்மாய் பகுதி போர்வெல்லில் இருந்து கச்சைகட்டி நீலமேக பெருமாள் கோயில் அருகே உள்ள மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
குட்லாடம்பட்டி அருகே ஊத்து ஓடை பாலம் பகுதியில் ரோட்டோரத்தில் குடிநீர் குழாய் உடைந்து 6 மாதங்களாக பல ஆயிரம் லிட்டர் நீர் வெளியேறி வருகிறது. பழுது சரி செய்யப்படாததால் தினமும் குடிநீர் வீணாகிறது.
எனவே குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி தோப்பில் தேங்கும் நீரால் மா மரங்கள் பாதிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

