/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்போகத்திற்கே இப்போது முக்கியத்துவம் நீர்வளத்துறை திட்டவட்டம்
/
முதல்போகத்திற்கே இப்போது முக்கியத்துவம் நீர்வளத்துறை திட்டவட்டம்
முதல்போகத்திற்கே இப்போது முக்கியத்துவம் நீர்வளத்துறை திட்டவட்டம்
முதல்போகத்திற்கே இப்போது முக்கியத்துவம் நீர்வளத்துறை திட்டவட்டம்
ADDED : நவ 24, 2024 04:02 AM
மதுரை : மேலுார், திருமங்கலம் முதல்போக பாசனத்திற்கு முக்கியத்துவம் தரப்படும். மழையைப் பொறுத்து இருபோகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர்பாரதிதாசன் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
அணையில் போதுமானதண்ணீரும் தொடர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாலும் இருபோகத்திற்குதண்ணீரை திறக்க வேண்டும் என நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன் கூறியதாவது:
மேலுார், திருமங்கலம் முதல்போகத்திற்கான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 85 நாட்கள் பயிருக்கு இன்னும் 35 நாட்களுக்கு தண்ணீர் தர வேண்டும். இதற்கே 3 டி.எம்.சி., அளவு தண்ணீர் தேவைப்படும்.
மதுரை, தேனி குடிநீருக்குவழங்கப்படுவதையும் சேர்த்தால் மொத்தம் 5305 மில்லியன் கனஅடி தண்ணீர் தேவைப்படும். இப்போது வைகை அணையில் உள்ள பெரியாறு தண்ணீரின் இருப்பு 1.25 டி.எம்.சி., பெரியாறு அணையில் 2.5 டி.எம்.சி., தண்ணீர் என மொத்தமே 4415 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் உள்ளது.
இந்த முதல்போகத்தை காப்பாற்றுவதற்கே ஒரு டி.எம்.சி., தண்ணீர் கூடுதலாக தேவைப்படும். பெரியாறு அணைக்கு நீர்வரத்து 400 கனஅடி தான் கிடைக்கிறது. 20 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையே இல்லை. கைவசம் உள்ள தண்ணீரைக் கொண்டு முதல்போகத்தை காப்பாற்றினால் தான் 2ம் போகத்திற்கு தண்ணீர் தரமுடியும்.
கடந்தாண்டு 8 டி.எம்.சி., தண்ணீர் இருந்ததால் தண்ணீர் திறப்பு சாத்தியமானது. இந்தாண்டு 4 டி.எம்.சி., தண்ணீரே உள்ளதால் பேரணை முதல் கள்ளந்திரி வரை 2ம் போகத்திற்கு தண்ணீர் தருவது கஷ்டம். அடுத்தடுத்து புயல் வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருநாட்கள் கழித்து மழை பெய்யும் போது தண்ணீர் தருவது குறித்து தீர்மானிக்கலாம். இதற்காக விவசாயிகளுடன் தனியாக கூட்டம் நடத்தப்படும் என்றார்.