/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்வே கோட்ட அலுவலகத்தில் குடிநீர் பற்றாக்குறை
/
ரயில்வே கோட்ட அலுவலகத்தில் குடிநீர் பற்றாக்குறை
ADDED : மார் 22, 2025 04:25 AM
மதுரை: மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் குடிநீர் வசதியின்றி ஊழியர்கள் தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வளாகத்தில் 650க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான குடிநீர் வசதி போதுமானதாக இல்லை. 450க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் முதல் கட்டடத்தில் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆர்.ஓ., குடிநீர் யூனிட்டுகள் மட்டுமே செயல்படுகின்றன.
இவை வெயில் நேரத்தில் ஊழியர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. நீர்ச்சத்து குறைபாடால் ஊழியர்களுக்கு உடலளவில் அசவுகரியம் ஏற்படுகிறது. ஊழியர்கள் நலன் கருதி கூடுதல் ஆர்.ஓ., யூனிட்டுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
டி.ஆர்.இ.யு., தொழிற்சங்க மதுரை கோட்டத் தலைவர் ராஜூ கூறுகையில், '' தொழிலாளர்களின் ஆரோக்கியம், மன நலனை பராமரித்து உற்பத்தித் திறனை அதிகரிக்க குடிநீர் வசதி அவசியம். அதனை பூர்த்தி செய்யும் வகையில் டி.ஆர்.எம்., அலுவலக வளாகம் முழுதும், குறிப்பாக அதிக பணியாளர்கள் செறிவு உள்ள பகுதிகளில் போதுமான ஆர்.ஓ., யூனிட்டுகளை நிறுவ வேண்டும்'' என்றார்.