/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மோட்டார் பழுதால் தண்ணீருக்கு தவிப்பு
/
மோட்டார் பழுதால் தண்ணீருக்கு தவிப்பு
ADDED : ஜூலை 10, 2025 02:58 AM
கொட்டாம்பட்டி: வீரசூடாமணிபட்டியில் போர்வெல்லில் தண்ணீர் இருந்தும் மோட்டார் இல்லாததால் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் ஊராட்சி சார்பில் 4 இடங்களில் போர்வெல் அமைத்து மூன்று மேல்நிலைத் தொட்டி மூலம்  குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதில் தேவா ஊருணி போர்வெல்லில் மோட்டார் பழுதாகிவிட்டது. பெரியகுளம் போர்வெல்லில் ஊராட்சி சார்பில் மோட்டாரை கழற்றிச் சென்றதோடு சரி, இதுவரை மாட்டவில்லை. அதனால் 2 மாதங்களாக இரண்டு மோட்டார் மட்டுமே செயல்படுவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறியதாவது: பருக தண்ணீரின்றி வெகு துாரம் அலைந்து தனி நபர்  வயல்களில் பாசன நீரை குடிநீராக பயன்படுத்துகிறோம்.  தண்ணீரை தேடி அலைவதால் வேலை மற்றும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். மேலும் ஒரு குடம் தண்ணீர் ரூ. 15க்கு விலைக்கு வாங்கும் அவலம் நிலவுகிறது.  தண்ணீர் பற்றாக்குறை குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை.
அதனால் மாவட்ட நிர்வாகம் இவ் விஷயத்தில் தலையிட்டு தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்றனர்.

