/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலத்தில் குடிநீர் தட்டுப்பாடு
/
திருமங்கலத்தில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஆக 05, 2025 04:27 AM
திருமங்கலம் திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் கிராசிங்கில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காமராஜர்புரம் தனியார் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே பள்ளம் தோண்டிய போது காமராஜபுரம், கற்பக நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் குழாய் துண்டிக்கப்பட்டது. இதனால் பத்து நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் இன்றி பொதுமக்கள் தவிக்கின்றனர்.
உடைக்கப்பட்ட குழாயை சீரமைக்கும் பணி மிகவும் மெதுவாக நடக்கும் நிலையில் நேற்று மாலை வரை பணி முடிவடையவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்கு வேலை நடக்கும் என ஊழியர்கள் தெரிவித்ததால் காமராஜர் புரம், கற்பக நகர் பகுதி மக்கள் குடிநீருக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும், அதுவரை லாரிகள் மூலம் வினியோகம் செய்யவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.

