/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இருபோக சாகுபடிக்கு ஜன.26 வரை தண்ணீர் திறப்பு
/
இருபோக சாகுபடிக்கு ஜன.26 வரை தண்ணீர் திறப்பு
ADDED : ஜன 21, 2025 05:56 AM
மதுரை: பேரணை முதல் கள்ளந்திரி வரையுள்ள இருபோக சாகுபடி நிலங்களுக்கான 2வது போகத்திற்கு ஜன. 26 வரை தண்ணீர் திறக்கப்படுகிறது.
மதுரை நீர்வளத்துறை வளாகத்தில் பெரியாறு வைகை உபகோட்டம் 1 ல் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் உதவி செயற்பொறியாளர் சையது ஹபீப் தலைமையில் நடந்தது. 45 ஆயிரம் ஏக்கர் 2ம் போகத்திற்கு டிச. 18 ல் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக ஜன. 13 இரவு முதல் 4 நாட்கள் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்த 4 நாட்களை கணக்கிட்டு ஜன. 26 வரை வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் திறக்க விவசாயிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டது. ஜன. 26 க்கு பின் 5 நாட்கள் தண்ணீர் திறப்பு, நான்கு நாட்கள் அடைப்பு என மார்ச் 30 வரை வினாடிக்கு 550 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

