ADDED : மார் 14, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: -: மன்னாடிமங்கலம் அக்ரஹாரத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ரோட்டில் ஆறாக ஓடியது. பல இடங்களில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத வேளையில் வீணாவது கண்டு அப்பகுதியினர் வேதனையடைந்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், உடனே குடிநீர் வினியோகத்தை நிறுத்தி தண்ணீர் வீணாவதை தடுத்தனர். பொதுமக்கள் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
