/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பரவை கண்மாய்க்கு தண்ணீர்; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
பரவை கண்மாய்க்கு தண்ணீர்; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 15, 2024 07:27 AM
மதுரை: மதுரை பரவை அந்தோணிதாஸ். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
பரவை கண்மாய்க்கு மற்றொரு நீராதாரம் வைகை ஆறு. இதன் நீர்வரத்து கால்வாய் 1979 வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது. வைகையின் உபரி நீர் கண்மாய்க்கு வருவது தடைபட்டுள்ளது. நீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கிறது. கால்வாயை சீரமைக்க வேண்டும். கண்மாய் நீர்வரத்திற்காக தேனுார், கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கக்கோரி பொதுப்பணித்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள்: கால்வாயை சீரமைத்து பரவை கண்மாய்க்கு நீர் சென்றடைவதை அரசு தரப்பில் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

