ADDED : ஏப் 13, 2026 11:37 PM
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் முனீஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மாநில ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் தலைமையில் கட்சியினர் கப்பலுார் அருகே சொக்கநாதன் பட்டியில் நேற்று முன்தினம் மாலை ஓட்டு கேட்டு சென்றனர்.
அப்போது தங்கள் கிராமத்தில் ஓட்டு கேட்க வரக்கூடாது எனக் கூறி அவர்களுடன் கிராமத்தினர் வாக்குவாதம் செய்தனர். அவர்களை கிராமத்திற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி உள்ளனர். மகாதேவன் புகாரில் சொக்கநாதன்பட்டியை சேர்ந்த 7 பேர் மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை சொக்கநாதன் பட்டியில் பிரசாரம் செய்ய அனுமதி பெற்றுவிட்டு, மாலை 5:30 மணிக்கு விதியை மீறி பிரசாரம் செய்ததாகக் கூறி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
