ADDED : மார் 02, 2026 07:24 AM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் மதுரையில் கூறியதாவது:
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் தமிழகத்திலும், பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவிலும் இரட்டை இன்ஜின் ஆக அரசு செயல்பட வேண்டும். அப்போது தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் என மக்கள் ஆவலோடு இந்த தேர்தலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். தே.ஜ., கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
மத்திய அரசின் திட்டங்களை, தி.மு.க., அரசு திட்டமிட்டு தாங்கள் செய்ததாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். தே.ஜ., கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை இன்று 90 சதவீதம் நிறைவடையும். புதிய நீதி கட்சிக்கு 5 தொகுதிகள் கேட்டிருக் கிறோம் என்றார்.
