/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் கால்வாய்களை காணோம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி மழை நேரத்தில் மக்கள் 'கரையேறுவதில்' சிக்கல்
/
மதுரையில் கால்வாய்களை காணோம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி மழை நேரத்தில் மக்கள் 'கரையேறுவதில்' சிக்கல்
மதுரையில் கால்வாய்களை காணோம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி மழை நேரத்தில் மக்கள் 'கரையேறுவதில்' சிக்கல்
மதுரையில் கால்வாய்களை காணோம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி மழை நேரத்தில் மக்கள் 'கரையேறுவதில்' சிக்கல்
ADDED : ஜன 03, 2024 06:31 AM
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் மழைக் காலத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டால் மழை நீரை வைகையாறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு கொண்டு சேர்க்கும் 13 பிரதான கால்வாய்களில் 70 சதவீதம் பகுதிகள் காணவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தனிநபர்களின் 'தாராள' ஆக்கிரமிப்புகளால் களவு போன கால்வாய்களின் பாதையை கண்டுபிடிக்க முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திணறுகின்றனர்.
மாநகராட்சியில் பகுதியில் மழைநீர் வடிந்து செல்வதற்காக கிருதுமால், சிந்தாமணி, பனகல் ரோடு, அவனியாபுரம், அனுப்பானடி என 13 கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44.23 கி.மீ., துாரம் கொண்ட இக்கால்வாய் பாதைகளில் 80க்கும் மேற்பட்டதுணை கால்வாய்களும் உள்ளன. இவற்றில் கிருதுமால், சிந்தாமணி மிகப் பெரியவை, முக்கியமானது. துவரிமானில் இருந்து துவங்கும் கிருதுமால் கால்வாய் 25 கி.மீ., வரை சென்று மதுரையின் முக்கிய நீர்ப்பாசன கால்வாயாகவும் முன்பு இருந்துள்ளது.
பல இடங்கள் குடியிருப்புகளாக மாறிய பின் கால்வாயும் சுருங்கிபோய்விட்டது. தற்போது இக்கால்வாய்கள்கழிவுநீர் நிரம்பியும், குப்பை கொட்டப்பட்டும் பரிதாப நிலையில் உள்ளன. கனமழை வெள்ளம் மதுரைக்கு ஏற்பட்டால் இந்த பிரதான கால்வாய்கள் தான்மக்களை காக்கும் சக்தி. இதை வலியுறுத்தி தான் அ.தி.மு.க., சார்பில் இக்கால்வாய்களை துார்வார மாநகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
இதற்கு மாநகராட்சி பொது நிதியில் முடியாது என்பதால் அரசிடம் சிறப்பு நிதி கோர மாநகராட்சி முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகள் கால்வாய்களை ஆய்வு செய்தபோது கிருதுமால், சிந்தாமணி கால்வாய்கள் உள்ளிட்டவை 70 சதவீதத்திற்கும் மேல் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது. நிதிப்பிரச்னை தீர்ந்தாலும் ஆக்கிரமிப்புகள் பெரும் சவாலாக இருக்கும் என மாநகராட்சி கருதுகிறது.
அதிகாரிகள் கூறியதாவது: கிருதுமால் நதி, சிந்தாமணி கால்வாய்கள் மட்டும் ஓரளவு உள்ளன. மற்றவை தாராளமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பொறியாளர்கள் குழு சார்பில் சர்வே செய்ததில் 13 கால்வாய்களிலும் 70 சதவீதம் தனியார் ஆக்கிரமிப்பு உள்ளது.
முந்தைய ஆட்சியில் கண்டுகொள்ளவில்லை. தற்போது கால்வாயை துார்வார வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு அவற்றின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அரசு நிதி ஒதுக்கினாலும் கால்வாய்களை மீட்பது பெரும் சவாலாக இருக்கும்.
இதுகுறித்து அதிகாரிகளுடன் மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆலோசனை நடத்தவுள்ளார் என்றனர்.