ADDED : மார் 07, 2026 06:29 AM

அ நிறம் | அளவு
மேலுார்: அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கோயிலில் உச்சிகிடா வெட்டி பொங்கல் வைத்தனர். சுவாமி வெள்ளி ரதத்தில் அம்பாளுடன் எழுந்தருளினார்.
இன்று (மார்ச் 7) தேரோட்டம், மார்ச் 8ல் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.
