ADDED : செப் 27, 2026 06:21 PM
பேரையூர்: பேரையூர் பகுதியில் மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், உளுந்து, பாசி,பருத்தி, துவரை, சோளம், கம்பு பயிர்களில் களையெடுப்புப் பணி மும்முரமாக நடக்கிறது.
இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு வறட்சி காரணமாக பயிர் கடுமையாக பாதித்தது. விவசாயிகளுக்கு மகசூல் கிடைக்காமல் போனது. கடந்த மாதம் பெய்த மழையால் ஈரப்பதத்தை பயன்படுத்தி விதைப்பு பணிகளை முடித்தனர்.
தொடர்ந்து அவ்வப்போது பெய்த லேசான மழையால் செடிகள் செழித்து வளர்ந்து வருகிறது. இத்தருணத்தில் விவசாயிகள் களையெடுப்புப் பணிகளைத் துவக்கி உள்ளனர். ஒரே நேரத்தில் இப் பணி துவங்கியுள்ளதால் கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக வேலையின்றி இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு, வேலை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
