ADDED : ஜன 28, 2026 06:33 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அருகே பாசன கால்வாயை துார்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு சோழவந்தான் வடகரை கண்மாயில் இருந்து ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம் வழியாக நெடுங்குளம், திருவாலவாய நல்லுார், கண்மாய்களுக்கு பாசனகால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. இக்கால்வாயில் ஆகாயத்தாமரை, நாணல் உள்ளிட்ட செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.
பல இடங்களில் புதராக மாறி கால்வாய் இருப்பது தெரியாத அளவிற்கு மூடியுள்ளது. கால்வாய் குறுகி தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பாசன நிலங்களுக்கு போதுமான தண்ணீர் செல்லாமல் விளைச்சல் பாதிக்கும் நிலை உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை துார்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
