தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பளு துாக்குதல் போட்டி

பளு துாக்குதல் போட்டி

பளு துாக்குதல் போட்டி


ADDED : செப் 06, 2025 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2025 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பளு துாக்கும் போட்டி மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.

ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, ஆணையத்தின் ஸ்டார் அகாடமி பயிற்சியாளர் மார்க்ஸ் லெனின் ஏற்பாடுகளை செய்தனர்.

பள்ளிகளுக்கான போட்டி முடிவுகள்: 60 கிலோ பிரிவில் சபரி 4ம் இடம், 65 கிலோ பிரிவில் அஜய் கிருஷ்ணன் 2ம் இடம், அகமது அப்துல் அஜிஸ் 3ம் இடம் பெற்றனர். 71 கிலோ பிரிவில் சஞ்சய் முதலிடம், 79 கிலோ பிரிவில் தீபக்ராஜ் முதலிடம், மதன் 2ம் இடம், தினேஷ் ராஜா போஸ் 3ம் இடம், கிரண்ராஜ் 4ம் இடம் பெற்றனர். மாணவி களுக்கான 44 கிலோ பிரிவில் அனந்த லட்சுமி 2ம் இடம், சோபாரிகா 3ம் இடம், 69 கிலோ பிரிவில் அரிதா 2ம் இடம்பெற்றனர்.

கல்லுாரிப் போட்டி முடிவுகள்: மாணவர்களுக்கான 60 கிலோ எடை பிரிவில் யோகராஜ் 2ம் இடம், 98 கிலோ பிரிவில் சிவப்பிரகாஷ் 3ம் இடம், மாணவிகளுக்கான 53 கிலோ பிரிவில் லோகிதா 2ம் இடம், 63 கிலோ பிரிவில் செல்வ ஜெயஸ்ரீ முதலிடம், 77 கிலோ பிரிவில் திரேஷா 2ம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரும் மாநிலப் போட்டிக்கு தேர்வாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us