/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெயிட் லிப்டிங், பவர் லிப்டிங் போட்டி
/
வெயிட் லிப்டிங், பவர் லிப்டிங் போட்டி
ADDED : நவ 21, 2024 04:43 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான வெயிட் லிப்டிங், பவர் லிப்டிங் போட்டிகள் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் நடந்தது.
பவர் லிப்டிங் முடிவுகள்
47 கிலோ பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி அக்ஷயா முதலிடம், மீனாட்சி அரசு கல்லுாரி சீத்தாலட்சுமி 2ம் இடம், லேடிடோக் கல்லுாரி பிரதீபா 3ம் இடம் பெற்றனர். 52 கிலோ பிரிவில் ஜி.டி.என். கல்லுாரி பூங்குழலி முதலிடம், மீனாட்சி கல்லுாரி கார்த்திகை ப்ரியா 2ம் இடம் பெற்றனர்.
57 கிலோ பிரிவில் மதுரை காமராஜ் பல்கலை (எம்.கே.யு.) அர்ஷூ அஞ்சு முதலிடம், லேடிடோக் கல்லுாரி லோகிதா 2ம் இடம், மீனாட்சி கல்லுாரி சிபியாள் 3ம் இடம் பெற்றனர். 63 கிலோ பிரிவில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி ரேணுகா முதலிடம், அருப்புக்கோட்டை ரமணா கல்லுாரி குபேரலட்சுமி 2ம் இடம், மங்கையர்க்கரசி கல்லுாரி அழகுமீனா 3ம் இடம் பெற்றனர். 69 கிலோ பிரிவில் மீனாட்சி கல்லுாரி சக்திமாரி முதலிடம், லேடிடோக் கல்லுாரி தமிழேந்தி 2ம் இடம், மங்கையர்க்கரசி கல்லுாரி சுப்ரியா 3ம் இடம் பெற்றனர்.
76 கிலோ பிரிவில் மீனாட்சி கல்லுாரி சந்தியா முதலிடம், லேடிடோக் கல்லுாரி சினேகா 2ம் இடம், 84 கிலோ பிரிவில் லேடி டோக் கல்லுாரி சிவரஞ்சனி முதலிடம், பூஜா 2ம் இடம், மீனாட்சி கல்லுாரி ராஜகுமாரி 3ம் இடம் பெற்றனர். 84க்கு மேற்பட்ட எடை பிரிவில் லேடிடோக் கல்லுாரி அர்ச்சனா முதலிடம், ரூபஸ்ரீ 2ம் இடம் பெற்றனர்.
வெயிட் லிப்டிங் முடிவுகள்
55 கிலோ பிரிவில் ஜி.டி.என். கல்லுாரி ஷர்மிளா முதலிடம், லேடிடோக் கல்லுாரி லோகிதா 2ம் இடம், மீனாட்சி கல்லுாரி மதுமிதா 3ம் இடம் பெற்றனர். 59 கிலோ பிரிவில் லேடிடோக் கல்லுாரி சவும்யா முதலிடம், சுஷ்மிதா 2ம் இடம், எம்.கே.யு. மாணவி அர்ஷூ அஞ்சு 3ம் இடம் பெற்றனர். 64 கிலோ பிரிவில் லேடிடோக் கல்லுாரி தமிழேந்தி முதலிடம், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி ரேணுகா 2ம் இடம், மீனாட்சி கல்லுாரி சந்தியா 3ம் இடம் பெற்றனர்.
71 கிலோ பிரிவில் விருதுநகர் வி.வி.வி., கல்லுாரி தாமரை முதலிடம், ரமணா கல்லுாரி குபேர லட்சுமி 2ம் இடம், மங்கையர்க்கரசி கல்லுாரி சுப்ரியா 3ம் இடம் பெற்றனர். 81 கிலோ பிரிவில் லேடிடோக் கல்லுாரி பூஜா முதலிடம், சினேகா 2ம் இடம், வி.வி.வி. கல்லுாரி அன்வர் நிஷா 3ம் இடம் பெற்றனர். 87 கிலோ பிரிவில் லேடிடோக் கல்லுாரி சிவரஞ்சனி முதலிடம், ரூபஸ்ரீ 2ம் இடம் பெற்றனர்.
வெயிட் லிப்டிங் மற்றும் பவர் லிப்டிங் போட்டிகளில் லேடிடோக் கல்லுாரி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தமீனா, ஹேமலதா பாராட்டினர்.