ADDED : மே 20, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவு ஜோதி யாத்திரை காங்., சார்பில் கர்நாடகாவில் துவங்கியது. கேரளா வழியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி கடந்து நேற்று மதுரை வந்தது. பழங்காநத்தம் ரவுண்டானாவில் நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சையது பாபு, நிர்வாகிகள் வெங்கட்ராமன், பாலு, கார்த்தி, மலர் பாண்டியன், கவுன்சிலர்கள் முருகன், போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.